“நயன்தாராவை தான் பிடிக்கும்” – ஆர்யா ரகளை

47

பிவிபி வழங்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய ஆர்யா, “இந்த படத்துக்காக ரெண்டு வருஷம் கடுமையாக உழைத்தோம். பொதுவா வெளிநாட்டில் படப்பிடிப்பு என்றால் அது முப்பது நாளாக தான் இருக்கும். ஆனால் ‘இரண்டாம் உலகம்’ தொண்ணூறு நாட்கள் ஜார்ஜியாவிலேயே படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். அதனால் ஒரு குடும்பம் போல பழகியிருக்கோம். எந்த டைரக்டர் படமென்றாலும் கஷ்டப்பட்டு தான் வேலை செய்றோம். ஆனால் எங்களை விட செல்வராகவன் அதிகமாக கஷ்டப்படுறார். இந்த படம் நிச்சயம் பேசப்படக்கூடியதாக இருக்கும். அனுஷ்காவோடு நடிச்சாலும் இப்ப வரைக்கும் எனக்கு நயன்தாரா தான் பிடிச்ச ஜோடி. ‘இரண்டாம் உலகம்’ ரிலீஸான பிறகு அனுஷ்கா தான் பொருத்தமான ஜோடியா இருப்பாங்க.” என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சலைக்காமல் பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.