‘இரண்டாம் உலகம்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் “இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிச்சிருக்கேன். ஆர்யாவுடன் சேர்ந்து நடிச்சதிலிருந்து அவர் எப்படி எல்லாருக்கும் பிடிச்ச ஹீரோவாக இருக்கார்ங்கிறது தெரிஞ்சது. ரொம்பவும் சின்ஸியரான நடிகர், படம் பிரம்மாண்டமாக வந்திருக்கு. தெலுங்கில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அதிகமா வருது. அதனால் தெலுங்கிலேயே கவனம் செலுத்த வேண்டியிருக்கு. தமிழில் அதுபோல கதைகள் வந்தால் இங்கும் நடிக்க தயாராக இருக்கேன். இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ள அவசரம் ஒண்ணுமில்லை. அதே சமயம் காதல் கல்யாணம் செய்து கொள்ள ஆசை தான்.” என்றார் அனுஷ்கா. இந்த சந்திப்பின் போது இயக்குனர் செல்வராகவன் உடன் இருந்தார்.