தற்போது கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துவரும் படம் ‘என்னமோ ஏதோ’. இது தெலுங்கில் ஹிட்டான “அலா மொதலயிந்தி” என்ற படத்தின் ரீமேக் ஆகும். இதில் ராகுல் ப்ரீத்திசிங், நிகிதா பட்டேல் என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். இருவருமே தமிழுக்கு புதிது என்றாலும் தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஆனவர்கள்.
ரவி தியாகராஜன் டைரக்ட் செய்துள்ள இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.. சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிறுவனமான ரவிபிரசாத் புரொடக்ஷன் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு அனைத்து தரப்பினரும் பார்க்கும் விதமாக ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.