மலையாளத்தில் மேஜர் ரவி டைரக்ஷனில் உருவாகும் படங்கள் அனைத்துமே ராணுவத்தை மையமாக வைத்து உருவாகும் அதிரடிப்படங்கள்தான். அந்த வகையில் ‘கீர்த்தி சக்ரா’(தமிழில் ’அரண்’), ‘குருசேத்ரா’, ‘காந்தகார்’ என அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட்டாக மைந்தன. தற்போது பிருத்விராஜை வைத்து மீண்டும் ராணுவ பின்னணியில் ‘பிக்கெட் 43’ என்ற படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மேஜர் ரவி.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படப்பிடிப்பில் பிருத்விராஜும் வந்து இணைந்து கொண்டார். இதில் பிருத்விராஜுடன் இந்தி நடிகரான ஜாவேத் ஜப்ரியும் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார். கதாநாயகி மட்டும் இன்னும் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை.