சென்னைக்கு எவ்வளவோ பேர் என்னன்னவோ ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வருவார்கள். ஆனால் தாதாவாக வேண்டும் என்று வரும் ஒருவனது காமெடி கதைதான் “அதுவேற இதுவேற”. இந்தப்படத்தில் வர்ஷன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சானியாதாரா நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, கஞ்சாகருப்பு, பொன்னம்பலம், சிங்கமுத்து, தளபதி தினேஷ், தியாகு, ஷகீலா, போண்டாமணி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இதில் இமான் அண்ணாச்சி முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
பாடல்களை நா.முத்துக்குமார் எழுத படத்திற்கு இசையமைத்திருப்பவர் தாஜ்நூர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.திலகராஜன். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டால், “படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் இரண்டு மணி நேரம் சந்தோஷமாக சிரித்துவிட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். சென்சார் உறுப்பினர்கள் படத்தை பார்த்து ரசித்துவிட்டு நல்ல படம் என்று சான்றிதழ் வழங்கி பாராட்டியதால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள். இதுவே இந்த சின்ன படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி” என்கிறார்.