அஜீத் ரசிகர்களிடம் திட்டு வாங்கிய அக்ஷரா

71

‘ஆரம்பம்’ படத்தில் மத்திய மந்திரியின் மகளாக நடித்து அஜீத்தின் குளிர் கண்ணாடியை கழற்றச் சொல்லும் காட்சியில் தியேட்டர்களில் அஜீத் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானவர் அக்ஷரா. அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான இவர் ‘நாடோடிகள்’ ஹிந்தி பதிப்பான ‘ராங்ரேஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

“நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்து கொண்டு இருந்தவள். அஜீத் சாருடைய ரசிகர்கள் பலம் திரை அரங்கில் அந்த காட்சியை பார்க்கும்போது தான் தெரிந்தது. ஆனால் அந்த காட்சியில் நடிக்கும்போதே அஜீத் சார்தான் எனக்கு தைரியமூட்டினார். இப்போது எனக்கு இந்த அளவுக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதற்கும் அவரே காரணம். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதை அவருடன் பழகிய நாட்களில் புரிந்து கொண்டேன்” என்கிறார் அஜீத் பற்றிய பிரமிப்பு மாறாமல்.

விளையாட்டு துறையிலும் மிகவும் ஈடுபாடு கொண்ட அக்ஷரா தேசிய அளவில் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டவர். தமிழ் திரை உலகில் ஒரு நிரந்தரமான முக்கிய இடத்தை பிடிப்பேன் என்று சொல்லும் இவருக்கு பிடித்தமான நடிகை கரீனா கபூர்தானாம்.

Leave A Reply

Your email address will not be published.