‘எம்.எம்.எஸ்’ஸுக்கு பலம் சேர்க்கும் சேதுவின் நடிப்பு

61

தொலை தொடர்பு சாதனங்கள் எந்த அளவுக்கு சாதகமானதோ அந்த அளவுக்கு பாதகமானதும் கூட என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள படம் தான் ‘மனதில் மாயம் செய்தாய்’. சுருக்கமாக சொன்னால் எம்.எம்.எஸ்.

பிரின்ஸ், திஷா பாண்டே ஜோடியாக நடிக்க, இந்தப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் ‘மைனா’ புகழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது. இவர்களுடன் ரிச்சா பானாய், மனோபாலா மற்றும் பலர் நடித்து உள்ளனர். சேதுவின் நடிப்பும், படத்தின் திரைக்கதை வசனமும் மிக பெரிய பலம் என்கிறார்கள் இந்த படத்தின் முதல் பிரதியை பார்த்த திரை உலகினர்.

பிரபல சாக்ஸ்போன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்தின் மகன் மணிகாந்த் கத்ரி தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் சுரேஷ் பி.குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தை ‘ஃபுல் ஹவுஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரித்திருக்கிறது.

“எங்களது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்றாலும் பட தயாரிப்பின் நுணுக்கங்களை நாங்கள் புரிந்துக் கொள்ள எங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகத்தான் இதைப்பார்க்கிறோம்” என்கிறார்கள் படத்தைத் தயாரித்துள்ள ஜெய்சன் புலிக்குட்டி மற்றும் வின்ஸ் மன்கடன் இருவரும். விரைவில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.