”தமிழ்சினிமாவுக்கு தனி சம்மேளனம் வேண்டும்” பாரதிராஜா பரபரப்பு பேச்சு

202

சேரனின் ’ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தின்டிரைலர் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவே மேடைக்குவந்தது போல பாரதிராஜா, ஷங்கர், சூர்யா, ராஜ்கிரண், அமீர், உட்பட முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய பாரதிராஜா, “இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் முக்கியமானஒரு விசயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன். ஆந்திராவிலிருந்து ஒரு அறிக்கைவந்திருக்கிறது. ’நாங்களெல்லாம் தெலுங்கானாபிரச்சனையில் அவதிபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தகொண்டாட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம்’ என்றிருக்கிறார்கள்.

நமக்கு பிரச்சனை இல்லாமலா இருக்கிறது. ஈழ பிரச்சனை, காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை இப்படி பலபிரச்சனைக்கு யாராவது ஆதரவு குரல் கொடுத்தார்களா. அதனால் தான் பல காலமாக நான் தமிழ் சினிமாவிற்கு என்றுதனி அமைப்புகள் வேண்டும் என்று சொல்லி வருகிறேன். தமிழ்சினிமா நடிகர்கள் சங்கம், தமிழ் சினிமா வர்த்தக சபை, தமிழ்சினிமா சம்மேளனம் என்று இனிமேலாவது மாற்றுங்கள். அதை இப்போதிருக்கும் நிர்வாகிகள் செய்ய வேண்டும்.” என்றுபரபரப்பாக பேசினார் பாரதிராஜா.

1 Comment
  1. https://lalabet-kazino.ru says

    927667 472200whoah this blog is fantastic i love studying your articles. 283979

Leave A Reply

Your email address will not be published.