‘பயணங்கள் தொடர்கின்றன’ என்ற புதிய படத்தில் நடிகர் ராஜேஸ் தன் மகன் தீபக் ராஜேஸை அறிமுகம் செய்கிறார். இதன் அறிமுக விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாலுமகேந்திரா, “எனக்கு பிடித்த நடிகர்களில் ராஜேஸ் முக்கியமானவர். காரணம் அவர் சினிமாவை ஆதமார்த்தமாக நேசிப்பவர். அவருடைய பிள்ளை தீபக்கிற்கு என்னுடைய வேண்டுகோள். பணம் குறைவாக கிடைக்கிறது என்பதற்காக நல்ல படங்களை தவிர்த்து விடக் கூடாது. நல்ல கதையுள்ள படங்களை எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு நடிக்கவேண்டும். ஏனென்றால் இப்போது நடிகர்களின் சம்பளத்தை கேட்கும்போது தலை சுற்றுகிறது.” என்றார்