மிஷ்கின் இயக்கிய ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் டிரைலர் வெளியீட்டிற்கு வந்த ராதாரவி நடிகர்கள் வாங்கும் அதிக சம்பளம் பற்றி பேசும்போது, “இப்போதிருக்கும் இளம் நடிகர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைபடுகிறேன். நீங்கள் அதிக சம்பளம் வாங்குங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் நடித்த படங்களை தயவுசெய்து போட்டு பார்த்து விட்டு அதற்குப் பிறகு சம்பளம் கேளுங்கள். இந்த நடிப்பிற்கு நாம கேட்ட சம்பளம் சரிதானா என்று பாருங்கள்.” என்று பேசினார் ராதாரவி.