துப்பாக்கி படம் வெளி வந்த நேரத்தில் கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் ஒரு படம் வந்து, இரண்டு படங்களுக்கும் பெரிய போஸ்டர் யுத்தமே நடந்தது. படம் பெரிய அளவில் பேசப்படாததால் அந்த படத்தை இயக்கிய லோகியாஸிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இப்போது அடுத்த படத்தில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற வேகத்தில் ’சர்வதேசம்’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ”உலகையே உலுக்கிப் போட்ட ஒரு விஷயத்தை படத்தில் வைத்திருக்கிறேன். அதனால் இந்தமுறை கண்டிப்பாக ஜெயிப்பேன்.” என்கிறார் லோகியாஸ்.
Prev Post