‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் டிஜிட்டல் பதிப்பின் வெளியீட்டிற்காக கமல்ஹாசன் வந்திருந்தார். அரங்கிற்குள் அவர் நுழைந்த போது ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அதில் ஒரு ரசிகர் ‘நீதான் தலைவா உண்மையான சூப்பர் ஸ்டார்’ என்று குரல் எழுப்பியதை கமல் கவனிக்க தவறவில்லை.
வி.ஐ.பிகள் மேடைக்கு வந்து பேச ஆரம்பித்த பிறகும் ரசிகர்கள் குரல் எழுப்புவதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் கமலே ஒரு விரலை உதட்டுக்கு நேரே வைத்து ரசிகர்களை செல்லமாய் கண்டித்தார். பிறகு கமல் பேச மைக்கை பிடித்தார்.
“இந்த விழாவிற்கு நான் என் படம் என்பதற்காக வரவில்லை. என் நண்பர் ரஜினியின் சார்பாகவும் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். நான் போக முடியாத விழாக்களுக்கு என் சார்பாக ரஜினி கலந்து கொள்வார்.” என்று பேச ஆரவாரம் செய்த ரசிகர்கள் கப்சிப் ஆனார்கள்.