‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற பெயரில் சேரன்நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய படத்தின் பாடல்வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட அமீர், ”இதுவரை சேரன் பத்து படங்கள் இயக்கியிருக்கிறார்.ஆனால் பதிமூன்று படங்களில் நடித்திருக்கிறார்.அப்படியென்றால் எவ்வளவு வேகமாக ஓடியிருக்கிறார் என்றுபாருங்கள். ஒரு படைப்பாளி நடிக்க வேண்டும் என்றுநினைக்கக் கூடாது. யார் மீதோ உள்ள கோபத்தில் நடிக்கவந்து விடுகிறார்கள். இதனால் டைரக்ஷன் நுட்பம் கையைவிட்டு போய் விடும். அதனால் சேரனுக்கு ஒரு வேண்டுகோள் நடித்தது போதும் நிறைய படங்களை டைரக்ஷன் பண்ணுங்கள்.” என்றார் அமீர்.