நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என முற்றிலும் புதுமுகங்களாக களம் இறங்கியிருக்கும் படம் தான் ‘அலையே அலையே’. கதாநாயகனாக ரஞ்சித், கதநாயகியாக நயனா நடிக்கும் இந்தப்படத்தை மணிகண்ட குமார் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்திற்கு தன்வி என்பவர் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நாளை நடைபெற உள்ளது. படத்தின் பாடல் குறுந்தகட்டை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கே.ஆர் வெளியிட இசையமைப்பாளர் டி.இமானும் நடிகர் விஜய்சேதுபதியும் பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள்.