நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு ஒரு வழியாக சுந்தர்.சி இயக்கியுள்ள ‘மதகஜராஜா’ மார்ச்-7 அல்லது 14 ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷால் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி இரண்டுபேரும் நடித்திருக்கிறார்கள். காமெடியில் கலக்குவதற்கு சந்தானமும் இருக்கிறார்.
ஜெமினி நிறுவனம் தயாரித்து பிரச்சனையில் ரிலீஸாகாமல் நின்ற இந்தப்படத்தை ஒருகட்டத்தில் விஷாலே தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மூலமாக வெளியிட முயற்சி எடுத்தார். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.. இப்போது ‘ஒன்பதுல குரு’ படத்தை இயக்கிய பி.டி.செல்வகுமார் இந்தப்படத்தை வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த தீபாவளிக்கு வெளியான பாண்டியநாடு ரிலீஸ் ஆவதற்கு முன்பே விஷால் இந்தப்படத்தைத்தான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது பாண்டியநாடு வெற்றியுடன் இந்தப்படத்தில் சுந்தர்.சி, சந்தானம் காம்பினேஷன் என்பதாலும் தைரியமாக, உற்சாகமாகவே இருக்கிறார் விஷால்