தெலுங்கு சினிமாவின் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘அத்தரிண்டிகி தாரெதி’ படம் 27.09.2013 ரிலீஸானது. இந்த படத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா, பிரணீதா நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர நதியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ரொம்பநாள் தாமதமாகத்தான் இந்தப்படம் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, சிலநாட்களுக்கு முன் இணையதளத்தில் இந்தப்படத்தின் ஒன்றரை மணிநேர காட்சிகள் படம் ரிலீஸாவதற்கு முன்னே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் படம் ரிலீஸான ஒரே நாளில் அமெரிக்காவில் இந்தப்படத்தின் பிரிமியர் ஷோ கலெக்ஷன் ரிப்போர்ட் தெலுங்கு சினிமாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நாளில் இதன் பிரிமியர் ஷோ கலெக்ஷன் 4 லட்சத்து 25ஆயிரம் டாலர்கள்( சுமார் ரூ.2கோடியே 62லட்சம்) வசூலித்து இதுவரையில் அமெரிக்காவில் வெளியான தெலுங்குப்பட பிரிமியர்ஷோ கலெக்ஷனில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு முன்பு வரை கடந்த சில மாதங்களுக்கு முன் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் 2லட்சத்து 28ஆயிரம் டாலர் (சுமார் ஒன்றரை கோடி) கலெக்ஷன் செய்து முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.