தெலுங்கு சினிமாவின் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘அத்தரிண்டிகி தாரெதி’ படம் வெற்றிகரமாக நூறாவது நாளை தொட்டுவிட்டது. அதுவும் ஒன்று.. இரண்டல்ல.. 32 தியேட்டர்களில். இத்தனைக்கும் படம் ரிலீஸாவதற்கு முன்னரே, சில விஷமிகளால் இணையதளத்தில் இந்தப்படத்தின் ஒன்றரை மணிநேர காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதையெல்லாம் ஊதித்தள்ளிவிட்டு இத்தனை தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியிருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை என்கிறார்கள் தெலுங்கு திரையுலகத்தினர்.
இந்த படத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா, பிரணீதா நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர நதியாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ரொம்பநாள் தாமதமாகத்தான் இந்தப்படம் வெளியானது. சரி.. ‘அத்தரிண்டிக்கு தாரெதி’ படத்துக்கு தமிழில் என்ன அர்த்தம்னு தெரியுமா? அத்தை வீட்டுக்கு எந்த வழியா போகணும்” அப்படிங்கிறது தான் இதோட அர்த்தம். இதில், பவன் கல்யாணுக்கு மாமியாராக, அதாவது, சமந்தாவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் நதியா.