இதுவரைக்கும் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்திருக்கும் துல்கர் சல்மான், தான் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயத்தில் ஒரு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டார். தற்போது ‘சலாலா மொபைல்ஸ்’ என்ற படத்தில் நடித்துவருகிறார் துல்கர். இந்தப்படத்தில் கொஞ்சும் கிளி நஸ்ரியா தான் துல்கருக்கு ஜோடி.
இந்தப்படத்தில் முதன்முதலாக நஸ்ரியாவும் ‘உம்மச்சி ராக்’ என்ற ஒரு பாடலைப்பாடி, அது ஹிட்டும் ஆகிவிட்டதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் இருக்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி ரசிகர்களை நீண்டநாள் காத்திருக்க வைக்காமல், படம் வரும் ஜனவரி-23ஆம் தேதி வெளியாகிறது.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தப்படத்தில் நம்ம சந்தானமும் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறாராம். இதன்மூலம் முதன்முதலாக மலையாளத்திலும் அடியெடுத்து வைக்கிறார் சந்தானம். இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்தவராக நடித்திருக்கும் சந்தானம், இதுவரை நடித்திராத வித்தியாசமான கெட்டப்பிலும் நடித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் படம் வரும்வரை இந்த விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம்.