கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நித்தியானந்தா கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுதலையானார். இது தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் 37வது பிறந்த தினத்தையொட்டி பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் நேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் நித்தியானந்தாவிடம் இருந்து தீட்சை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார்.
இதனை தொடர்ந்து நடிகை ரஞ்சிதா, இனி ‘மா ஆனந்தமயி’ என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. “உண்மை, அமைதி, அகிம்சை போன்றவற்றை நான் புரிந்து கொண்டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன். முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன்”என்கிறார் ரஞ்சிதா.. ஸாரி.. ‘மா ஆனந்தமயி’. ரஞ்சிதாவுக்கு நித்யானந்தா சன்னியாசி தீட்சதை வழங்கியதற்கு மடாதிபதிகள்பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.