‘எதிர்நீச்சல்’ படத்தில் பொறுப்பில்லாமல் சுற்றித்திரிந்து, பின்னர் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாரத்தான் ஓட்டத்திற்கு கடுமையான பயிற்சிகள் எடுத்து தயாராகி வெற்றி பெறுவார் சிவகார்த்திகேயன்.
அதேபோல தற்போது நடித்துவரும் ‘மான் கராத்தே’ படத்தில் சாதாரணமாக, ஜாலியாக பைக்கில் சுற்றித்திரியும் சிவகார்த்திகேயன், ஒருகட்டத்தில் பாக்ஸிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு பாக்ஸராக மாறுகிறார்.
இதற்காக சிவகார்த்திகேயன் தேசிய அளவில் பதக்கம் வென்ற மதன் என்பவரிடம் பாக்ஸிங் பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதுவும் போதாதென்று ‘பூலோகம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு பயிற்சிகள் தந்த சிவா மாஸ்டரும் சேர்ந்து சிவகார்த்திகேயனை ‘ஃபிட்’ ஆக்கியிருக்கிறார்.
இந்தப்படத்தில் பீட்டர் என்ற நகரத்து வாலிபனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை எழுத அவரது சிஷ்யரான திருக்குமரன் இந்தப்படத்தை இயக்குகிறார்.