நடிகை ரம்யா நம்பீசன் பாடகியாக மாறி ரொம்ப நாட்களாச்சு. ஆனால் தமிழில் அல்ல.. அவரது தாய்மொழியான மலையாளத்தில்.. இவன் மெகாரூபன் என்ற படத்தில் இவர் பாடிய ஆண்டலோண்டே என்ற பாடல் இவரது குரலுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது.
அதன்பின்னர் கடந்த வருடம் வெளியாகி தேசியவிருதுகள் பெற்ற தட்டத்தின் மறயத்து படத்தில் இவர் பாடியமுத்துச்சிப்பி என்ற பாடல் தான் கேரளாவின் தேசியகீதம்போல திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது.
தமிழில் பாடவேண்டும் என்ற ஏக்கம் ரம்யா நம்பீசனுக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்து தயாரிக்கும் ‘பாண்டியநாடு’ படத்தில் ரம்யா நம்பீசனை பாடவைத்து தமிழில்பாடகியாக அறிமுகம் செய்து அந்த ஏக்கத்தை போக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். இந்தப்படத்தின் கதாநாயகியான லட்சுமிமேனன் தான், இந்தப்பாடலில் நடிக்கிறார்.