கார்த்தி நடிக்க எம்.ராஜேஸ் இயக்கியுள்ள ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போவது எற்கனவே உறுதிசெய்யப்பட்ட ஒன்றுதான். தீபாவளி கொண்டாட்டத்தை வரும் அக்டோபர் 4ஆம் தேதியில் இருந்தே ஆரம்பிக்க இருக்கிறார்கள் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படக்குழுவினர். தமன் இசையில் ராகுல் பாடியுள்ள ‘செல்லமே’ சிங்கிள் ட்ராக்கை 4ஆம் தேதி வெளியிட்டு மத்தாப்பு கொளுத்த இருக்கிறார்கள். அதன்பின்னர் 10ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் என தொடர்ந்து சரவெடி தான்.. தீபாவளி தினத்தில் அதிரடி தான்.. ரசிகர்களே, அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் சிங்கிள் ட்ராக்கிற்காக இப்போதே செவிகளை தீட்டிக்கொள்ளுங்கள்.