தெலுங்கில் அஜீத் படங்களுக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கூட்டமே இருக்கிறது. அஜீத் நடித்த பில்லா, மங்காத்தா இரண்டுமே அங்கே சூப்பர்டூப்பர் ஹிட். அதனால் இப்போது அவர் நடித்துவரும் ‘ஆரம்பம்’ படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. மேலும் ஆந்திரா ரசிகர்களின் கனவுக்கன்னியான நயன்தாராவும் கனவுக்கன்னியாக முயற்சித்துவரும் டாப்ஸியும் இந்தப்படத்தில் இருப்பதால் படம் தெலுங்கிலும் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.
தெலுங்கில் இந்தப்படத்திற்கு ‘ஆட்டா ஆரம்பம்’(அதாவது ஆட்டம் ஆரம்பம்) என பெயர் வைத்திருக்கிறார்கள். முதலில் தமிழில் கூட ஆட்டம் ஆரம்பம் என பெயர் வைப்பதாகத்தான் இருந்தது. அனேகமாக அக்டோபர் முதல் வாரத்தில் தெலுங்கில் ‘ஆட்டா ஆரம்பம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவனின் இசைக்கென்றே ஒரு ரசிகர்கூட்டமும் ஆந்திராவில் இருக்கிறது. எல்லாம் பில்லா, மங்காத்தா செய்த மாயம்தான்.