நான் வில்லி என யார் சொன்னது?-சீறும் ஸ்ருதிஹாசன்

53

வேறு யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தியிலும் தெலுங்கிலும் உருவான ‘ராமையா வஸ்தாவையா’ என்ற ஒரே பெயர் கொண்ட படத்தில் ஒரே நேரத்தில் நடித்த பெருமை ஸ்ருதிஹாசனுக்கு மட்டும்தான். அதில் ஒன்று ரிலீஸாகி விட்டது. இன்னொன்று ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இதில் என்ன ஆச்சர்யம்.. இருமொழிகளில் ஒரு படத்தை எடுக்கும்போது ஒரே பெயர் வைப்பது ஒன்றும் புதிதில்லையே என்று உடனே நினைத்து விடாதீர்கள்.. இரண்டு படங்களின் கதையும் வேறு.. இயக்குனர்களும் வேறு. இந்தியில் பிரபுதேவா இயக்கிய ராமையா வஸ்தாவையா’ ரிலீஸாகி ஓடி, ஓய்ந்துவிட்டது. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடியாக நடித்துவரும் ராமையா வஸ்தாவையா அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இந்தப்படத்தில் சமந்தா தான் ஹீரோயின். அப்போ ஸ்ருதிஹாசன்..? படத்தில் அவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்கிறார்கள். ஆனால் ஸ்ருதியோ இதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். “நான் வில்லி கேரக்டரில் நடிக்கிறேன் என்ற செய்தியில் உண்மையில்லை. ஆனால் சிறப்பு தோற்றத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். அது சஸ்பென்ஸ்” என பழைய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய செய்திக்கு கமா போட்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

Leave A Reply

Your email address will not be published.