செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீடு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. தெலுங்கில் ’வர்ணா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விழாவில் செல்வராகவன், “இனிமேல் பாலிவுட், ஹாலிவுட் என்று சொல்லாதீர்கள். காரணம் இனி தென்னிந்திய சினிமாதான் பேசப்படப்போகிறது. அதற்கு ராஜமௌலி, நான், தமிழில் இன்னும் பல இயக்குனர்கள். மலையாளத்தில் சிலர், கன்னடத்தில் சிலர் என்று எல்லோரும் சினிமாவை உலக அளவில் கொண்டு போகப்போகிறார்கள். இந்த படத்தில் வேலை பார்த்த அனுஷ்கா என் தங்கச்சி மாதிரி. என் கூடப்பிறந்த தங்கச்சி கூட இப்படி என்னை கவனித்தது கிடையாது. அப்படி ஒரு அக்கறை என் மேல.” என்று பேசியது கூட்டத்தில் பலத்த கரகோசத்தை எழுப்பியது.
அடுத்து பேசிய ஆர்யா, ”இந்த படத்தின் உண்மையான ஹீரோ நான் இல்லை. அனுஷ்காதான் இப்ப ஸ்கிரீன் பண்ணப் போற டிரைலரை பாருங்க புரியும்.” என்று சொல்லிவிட்டு அமர, ஒளிபரப்பப்பட்ட வர்ணா டிரைலரில் அனுஷ்கா ஆர்யாவை மிதித்து துவைத்து எடுக்கும் காட்சி படு மிரட்டலாக வந்திருந்தது.