’என்னமோ ஏதோ’ இந்த புதிய படத்தில் கௌதம் கார்த்திக், பிரபு, ரகுல் ப்ரீத்திசிங், நிகிஷாபட்டேல் அகியோர் நடித்திருக்கின்றனர். இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு கௌதம் ஜாலியாக பதில் கொடுத்தார். ”நடிக்க தயாரான போது அப்பா ‘பயப்படாதே’ என்று மட்டும் தான் சொன்னார். காதல் மன்னனா, ஆக்ஷன் ஹீரோவா நம்ம கேரியர் நம்மை எப்படி அழைச்சிட்டுப் போகுதோ அதன்படியே போகப் போறேன். காதல் எல்லாம் கேமராவுக்கு முன்னால் தான். எதிலுமே போய் லாக் ஆகக்கூடாது. அரசியல் எனக்கு தெரியாத ஒரு விஷயம். எனக்கு அப்பா மாதிரி அரசில்ல ஆர்வம் கிடையாது. ’கடல்’ படம் வெற்றி படமாங்கிறது முக்கியமில்ல. அது ஒரு லெஜண்ட்டோட படம். அதில் அவர் என்ன சொன்னாரோ அதை மட்டும்தான் நான் செய்தேன். அந்த படமே எனக்கு பேர் வாங்கி தந்த படம்தான். ‘என்னமோ ஏதோ’ படம் ரொமாண்டிக் காமெடி படம். அப்பாவோடு நடிச்ச பிரபு அங்கிளோட சேர்ந்து நான் நடிக்கிறது எனக்கு பெருமையா இருக்கு.” என்றார் கௌதம் கார்த்திக்.
Prev Post