ஆரம்பம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முதலில் படத்தை தீபாவளி தினமான நவம்பர்-2ஆம் தேதி வெளியிட தீர்மானித்திருந்தவர்கள், அதன்பிறகு பட ரிலீஸ் தேதியை இரண்டு நாட்கள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 31ஆம் தேதிக்கு மாற்றிவைத்து விட்டார்கள். சரி.. தீபாவளி தினத்தன்று ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் அடித்துப்பிடித்து சண்டையிட்டுக் கொண்டு இருக்கக்கூடாது என்பதால் முன்கூட்டியே ரிலீஸ் செய்வதாக நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் இதற்கு பின்னாடி ஒரு செண்டிமெண்ட்டே ஒளிந்திருக்கிறது. அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. இதற்குமுன் ஆரம்பம் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டது, படத்திற்கு பூஜை போடப்பட்டது, படத்தின் டைட்டிலை அறிவித்தது, முதல் டீஸரை வெளியிட்டது, அடுத்து ஆடியோ ரிலீஸ், ட்ரெய்லர் என எல்லாமே வெளியிடப்பட்டது வியாழக்கிழமை அன்றுதான். அதனால் செண்டிமெண்ட்டாக படத்தையும் வியாழக்கிழமை ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே ரிலீஸ் செய்கிறார்களாம்.