‘ஆரம்பம்’ படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பில் யுவன் தீவிரம்

71

படத்திற்கு தலைப்பு வைப்பதிலிருந்து எல்லா விஷயத்திலும் ‘ஆரம்ப’த்திலிருந்தே ஒரு சஸ்பென்ஸை கடைபிடித்துவந்தது ‘ஆரம்பம்‘ டீம். பில்லாவுக்குப்பின் அஜீத்தும் விஷ்ணுவர்தனும் இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக்கிடக்கிறது. மேலும் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, சந்தானம் நட்சத்திரங்களின் ஜெகஜோதியான அணிவகுப்பும் இருக்கிறது.

தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயார் என அறிவிப்பு கொடுத்துவிட்டதால் ‘ஆரம்பம்’ படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அதன் ஒரு பகுதியாக தற்போது ஆரம்பம்’ திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்காக யுவன் ஷங்கர் ராஜாவும், இயக்குனர் விஷ்ணுவர்தனும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இதனால் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் திட்டமிட்ட தேதிக்குள் முடிவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பில்லாவிலும் மங்காத்தாவிலும் தனது பாடல்களால் மட்டுமல்ல, வித்தியாசமான பின்னணி இசையாலும் ஒரு புதிய அஜீத்தை அவரது ரசிகர்களுக்கு காட்டிய யுவன் சங்கர் ராஜா இதிலும் மிரட்டியிருக்கிறார். மேலும் நட்சத்திர எழுத்தாளர்களான சுபா இந்தப்படத்தில் விஷ்ணுவர்தனுடன் இணைந்திருப்பதால் ஆரம்பம் அமர்க்களமாக வந்திருக்கிறது என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

Leave A Reply

Your email address will not be published.