நடிகை சங்கவி திருமணம் ; தொழிலதிபரை மணந்தார்..!

231

sangavi marriage
தமிழ்சினிமாவில் இன்றைய அறிமுக நடிகைகள் எல்லாம், எனக்கு அஜித், விஜய் படங்களில் நடிக்க ஆசை என கிளிப்பிள்ளை சொல்வதுபோல பல பேட்டிகளில் சொல்வதை கேட்க முடியும்.. ஆனால் அஜித் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே தானும் அறிமுகமான சங்கவி, தனது இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதுபோன்ற பொன்னான வாய்ப்பு வேறு எந்த நடிகைகளுக்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

சினிமாவில் சுமார் 25 வருடம் கடந்துவிட்ட சங்கவிக்கு, தற்போது பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவருடன் நேற்று திருமணம் நடைபெற்றது.. இருவீட்டாரின் குடும்பமும் நட்புகளும் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமணத்தில் சங்கவியின் ‘பொற்கால’ தோழியான மீனா நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Comments are closed.