
சில இயக்குனர்கள் ஒன்றோ இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துவிடுவார்கள்.. ஆனால் அந்த வெற்றியை வைத்து, தொடர்ந்து அவசர அவசரமாக அறுவடை செய்ய நினைக்க மாட்டார்கள்.. இதோ, நம்ம வெற்றிமாறன் அப்பட்டிப்பட்ட ஒருவர்தான்.. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படத்தை தொடர்ந்து மூன்றாவதாக தான் இயக்கியுள்ள ‘விசாரணை’ படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
நாளை இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தை பார்த்த கமல், “நல்ல சினிமாவின் தாக்கத்தை வெற்றிமாறனுக்குள் விதைத்துச்சென்ற பாலுமகேந்திராவுக்கு நன்றி.. படம் பார்த்து வியந்தேன்” என பாராட்டு மகுடம் சூட்டினார்..
இப்போது அந்த மகுடத்தில் வைரக்கல் பதித்தது போல சூப்பர்ஸ்டார் ரஜினியும் ‘விசாரணை’ படத்தை பார்த்துவிட்டு பிரமித்துப்போய் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தனது பாராட்டில், “விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் இதுவரை நான் பார்த்தது இல்லை. உலக பட வரிசையில் ஒரு தமிழ்ப்படம்” என தனது வாழ்த்துக்களை வெற்றிமாறனுக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனுஷுக்கும் தெரிவித்துள்ளார் ரஜினி.
Comments are closed.