கமலுடன் கைகோர்த்தது லைக்கா..!

157

kamal in lyca

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘2.O’ படத்தை ஆரம்பித்த லைக்கா நிறுவனம் தற்போது கமல் நடிக்கும் படத்தையும் தயாரிப்பதன் மூலம் இன்னொரு உயரம் தொட்டிருக்கிறது.. தூங்காவனம் படத்தை தொடர்ந்து இந்தப்படத்தையும் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வாவே இயக்குகிறார்..

இந்தப்படத்தில் கமலின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும் மகளாக ஸ்ருதிஹாசனும் நடிக்க இருக்கிறார்கள். ‘பேர் சொல்லும் பிள்ளை’ (1987), ‘பஞ்ச தந்திரம்’ (2002) படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கமலுடன் இணைந்து நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். கமலுடன் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் இவர் கிட்டத்தட்ட 14 வருட இடைவெளி விட்டு நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.