
இன்றைய தேதியில் பேய்ப்படங்களை உருவாக்குபவர்களுக்கு மெயின் பிரச்சனை பேய்கள் புகுந்துகொள்ள தேவையான ஆள் யாரென்பதுதான்.. ஈரம் படத்தில் தண்ணீர் மூலம் பழிவாங்குவது போல, காஞ்சனாவில் திருநங்கை பேயாக மாறுவது போல ஏதோ ஒரு ரூட்டை கண்டுபிடித்துவிட்டால் இந்த பேய் காம்பெடிஷனில் ஈசியாக வின் பண்ணி விடலாம்..
நாளைய இயக்குனர் குறும்பட விழாவில் பங்குகொண்டு தனது குறும்படங்களை திரையிட்ட எஸ்.பாஸ்கருக்கு தோன்றிய ஐடியா செல்போனில் புகுந்துகொள்ளும் பேய் பண்ணும் அட்டகாசங்கள் தான். ஒரு செல்ஃபோனில் இருந்து கிளம்பும் பேயை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்த செல்ஃபோன் யார்யாரிடத்தில் பயணிக்கிறது, அவர்களை அந்தப்பேய் என்ன பாடுபடுத்துகிறது, அதனால் அவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை திகில் கலந்த காமெடியுடன் இயக்குனர் சுந்தர்.சியிடம் சொன்னவுடன் அவருக்கு மிகவும் பிடித்துவிட தனது அவ்னி கிரியேஷன்ஸ் மூலம் படத்தை தயாரிப்பதாக சொல்லி. படத்திற்கான அனைத்து வேலைகளையும் உடனே துவங்க சொல்லிவிட்டாராம்.
வைபவ், கருணாகரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, வி.டி.வி கணேஷ், யோகிபாபு உட்பட இன்னும் பல காமெடி நட்சத்திரங்கள் இதில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்தமாத இறுதியில் “ஹலோ நான் பேய் பேசுறேன்” படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.
Comments are closed.