மூத்த நடிகருக்கு உதவி ; நலப்பணிகளில் தீவிரம் காட்டும் நடிகர்சங்கம்..!

214

kasim Thatha (1)
நடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஆளாளுக்கு வேலைகளை பகிர்ந்து சுறுசுறுப்பாக களம் இறங்கியிருக்கின்றனர். நடிகர் சங்க தேர்தலுக்கு முன்னரே திருச்சியை சேர்ந்த மூத்த சினிமா கலைஞரான 9௦ வயது காசிம் தாத்தாவுக்கு நடிகர் பொன்வண்ணன் மூலமாக மருத்துவ சிகிச்சைக்காக பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

தற்போது காசிம் நன்கு குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளான பூச்சி முருகன், ஜெரால்ட், டேவிட், துரை ஆகியோர் இன்று அவருடைய வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த நடிகர் காசிம் புதிதாக பொறுப்பேற்றுள்ள நடிகர் சங்கத்தையும் அதன் நிர்வாகிகளையும் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியுள்ளார்.

காசிம் அவர்கள் 45 வருடங்களாக தமிழ் சினிமா நடிகராகவும், 38 வருடங்களாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடனும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.