“வீட்ல டைவர்ஸ் வரைக்கும் போயிருவாங்க” ; முத்தக்காட்சிக்கு நோ சொன்ன ஹீரோ..!

180

nermugam
‘நேர்முகம்’ என்கிற படத்தில் ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக மீரா நந்தனும், மீனாட்சியும் நடிக்கின்றனர். ‘மிரண்டவன்’ என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் முரளி கிருஷ்ணா இந்தப்படத்தை இயக்குகிறார். காட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் முக்கிய ஜோடிகளாக ரஃபியும் மீனாட்சியும் நடிக்கின்றனர்.

இருவரும் அதிலிருந்து தப்பிக்க நடத்தும் போராட்டத்தின் வாழ்வா சாவா நிமிடங்களில் ஒரு அழுத்தமான முத்தக் காட்சி இருந்தால் நன்றாக இருக்குமென நினைத்தார் இயக்குனர் முரளி கிருஷ்ணா. மீனாட்சியிடம் இப்படி ஒரு முத்தக்காட்சி இருக்கிறது என முன்கூட்டியே சொல்லாவிட்டாலும், இப்போது சொன்னதும் “அதனால் என்ன.. இட்ஸ் ஒகே” என ஒப்புக்கொண்டாராம்.. ஆனால் படத்தின் ஹீரோவோ, லிப்லாக் காட்சியா முடியவே முடியாது என அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாராம்.

கிடைச்ச கேப்புல கெடா வெட்டுற ஆர்யாக்களுக்கு மத்தியில் லிப்லாக்குக்கு பயந்து ஓடிப்போற ஹீரோவா என ஆச்சர்யப்பட்டு காரணத்தை கேட்டுள்ளார்கள்.. “சார் நான் கல்யாணமானவன், வீட்டில் டைவர்ஸ் வரைக்கும் போயிடுவாங்க. படம் நடிக்கணும் என்பது என் கனவு.. அதனாலதான் நானே படத்தை தயாரிச்சு நடிக்க வந்திருக்கேன். பத்து மாடியிலிருந்து குதிக்கச் சொல்லுங்க குதிக்கேன். தயவுசெய்து இது மட்டும் வேணாமே” என கூறிவிட்டாராம்.. ஹீரோவே தயாரிப்பாளராச்சே.. மறுக்க முடியுமா..?

Comments are closed.