ஆரம்பம் அக்-31ஆம் தேதியே ஆரம்பம்

168

ஆரம்பம் படத்தின் ரிலீஸ் வேலைகள் ஒருபக்கம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஆரம்பம் படத்தை மற்ற மொழிகளில் திரையிடுவதற்காக சப் டைட்டில் வேலைகளும் நடந்து வருகின்றன. இந்த வேலையை சப் டைட்டில் எழுதுவதில் ஸ்பெஷலிஸ்டான ரெக்ஸ் என்பவர் செய்துவருகிறார். சப்டைட்டிலுடன் வெளியாகும் படங்களை பார்ப்பதில் மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது இந்தப்படத்தின் என்.எஸ்.சி. ஏரியா வெளியீட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. அஜீத் ரசிகர்களுக்கு தீபாவளி போனஸாக அக்டோபர் 31ஆம் தேதியே படத்தை திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன. அனேகமாக அக்-20ஆம் தேதிக்கு மேல் படம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிட்டுக் காட்டப்படும் என்று தெரிகிறது. அஜீத்துடன் விஷ்ணுவர்தன் டைரக்ஷன், நயன்தாரா, ஆர்யா, தாப்ஸி, யுவனின் இசை என ஒரு கமர்ஷியல் பேக்கிங்காக உருவாகி இருக்கிறது ஆரம்பம்.

1 Comment
  1. Verloskundigen Kampen says

    640730 158657As being a Newbie, Were permanently exploring online for articles which can be of assist to me. Numerous thanks 513890

Leave A Reply

Your email address will not be published.