இடைவிடாமல் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார் ஸ்ருதிஹாசன். தெலுங்கு, இந்தி என இரண்டு மொழிகளிலும் பிஸி. இப்போது மீண்டும் ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு தமிழ்ப்படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழுக்கு எண்ட்ரி என ஸ்ருதியின் கால்ஷீட் டைரி எப்போதும் ஃபுல்லாகவே இருக்கிறது. தவிர ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும் அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக நிற்காமல் ஓடுகிறார். இது ஒரு தாயாக ஸ்ருதியின் அம்மாவான சரிகாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தன் மகள் முன்னணி நடிகையாக வலம் வருவதைப் பார்த்து சந்தோஷப்பட்டாலும், கொஞ்சம்கூட ஓய்வில்லாமல் அவர் பம்பரமாக சுற்றுவதைப் பார்க்கும்போது, ஒரு தாயாக அவரது உடல் நலத்தைப்பற்றி கவலைப்படாமல் சரிகாவால் இருக்கமுடியவில்லை. கடந்த ஜூலை-19ஆம் தேதி இந்தியில் ஸ்ருதி நடித்த ராமையா வஸ்தாவையா, டி-டே என இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸானது. அந்த நேரத்தில் இரண்டு படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஓய்வில்லாமல் மீடியா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ஸ்ருதி.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஸ்ருதி நடித்துள்ள ராமையா வஸ்தாவையா படம் நேற்று வெளியாகியிருக்கிறது. தற்போது அதற்கான புரமோஷன் வேலைகளில் சுற்றிக்கொண்டிருக்கிறார் ஸ்ருதி. இதையெல்லாம் பார்த்துத்தான், தனது மகள் குறைந்தது பத்து நாட்களாவது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என ஒரு தாய்க்கே உரிய அக்கறையுடன் ஸ்ருதியுடம் கூறியுள்ளார். ஸ்ருதிக்கும் அது சரியாகப்பட்டாலும் இப்போதிருக்கும் சூழலில் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்தாலே அது பெரிய விஷயம்.. பத்து நாட்கள் ஓய்வுக்கெல்லாம் சான்ஸே இல்லை என்கிறாராம்.