மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ரஞ்சித். இவர் இயக்குனராக அறிமுகமானது மோகன்லால் படத்தில் தான் என்றாலும் மம்முட்டியின் ஃபேவரைட் டைரக்டர்களில் ஒருவராகவே கடுதப்படுகிறார். காரணம் வருடத்திற்கு ஒரு படமாவது மம்முட்டியை வைத்து இயக்கி விடுவார். சமீபத்தில்தான் இவர்கள் கூட்டணியில் உருவான ‘கடல் கடந்நொரு மாத்துக்குட்டி’ படம் வெளியானது.
அதற்காக மோகன்லாலுக்கும் இவருக்கும் பிரச்சனை எனறு நினைத்து விடாதீர்கள். கடந்த வருடம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக்கொடுத்த, கேரள அரசாங்கத்தால் சிறந்த விழிப்புணர்வு திரைப்படம் என பாராட்டப்பட்ட ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்கியதும் இவர்தான். தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் ரஞ்சித். படத்தின் பெயர் ‘மேன் ஃப்ரைடே’. இந்தப்படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜும் இணைந்து நடிக்கிறார் என்பதுதான் ஹைலைட்.
காரணம் இதுவரை மோகன்லாலும் பிருத்விராஜும் ‘ட்வெண்ட்டி-20’ என்ற ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் அதில்கூட ப்ரித்விராஜும் மோகன்லாலும் சேர்ந்து வருகிற மாதிரியான காட்சி எதுவும் இல்லை. அந்த வகையில் இவர்கள் இருவரும் இணையும் முதல்படம் என்று இதைத்தான் சொல்லவேண்டும். பிருத்விராஜ் தன்னுடன் நடிப்பதைப்பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் மோகன்லால்.
பிருத்விராஜும் ஒரு வகையில் இயக்குனர் ரஞ்சித்தின் ஆஸ்தான ஹீரோதான். அம்மக்கிளிக்கூடு, திரக்கதா, கடந்த 2011ல் வெளியான இண்டியன் ருபீ என ரஞ்சித் இயக்கிய படங்களில் பிருத்விராஜ்தான் ஹீரோ. இந்தப்படத்தில்திலீப்பின் மனைவியும் முன்னாள் நடிகையுமான மஞ்சு வாரியரும் நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல தகவல்.