500 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் அல்வா வாசு இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனாரான அந்த பொறுப்பு கிடைக்காமல் நடிகராகவே பயணித்து பல படங்களில் அவர் நடித்துள்ளார். ‘’அமைதிப்படை’ என்கிற சூப்பர்ஹிட் படத்தின்மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்டோரின் கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்று வந்தார்..
இத்தனை படங்களில் நடித்திருந்தும் பெரிய அளவில் அவர் சம்பாதிக்கவே இல்லை. உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஆறு மாதமாக அலைந்து கொண்டிருந்தார். மிக சிரமமான காலகட்டத்தில் சென்னையில் வந்து இருக்கவேமுடியாத ஒரு சூழ்நிலையில் அவர் சொந்த ஊரான மதுரைக்கே சென்றுவிட்டார்.
கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை , விரைவில் உயிர் பிரிந்து விடும் அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர்
இந்த விஷயம் நடிகர்சங்கத்தின் கவனத்துக்கு சென்றபின் அவர்கள் அல்வா வாசு குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்ட ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டார்கள். இதுபற்றி நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கூறிய விபரங்களை எல்லாம் குறிப்பிட்டுள்ளார்..
“ஒரு நல்ல சூழ்நிலைக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் போதே மருத்துவத்தை அவர் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதர்களுடைய வாழ்கையில் கடைசி நம்பிக்கை என்று சொல்லக்கூடிய விஷயங்கள் இரண்டு இருக்கிறது ஒன்று மருத்துவம் மற்றொன்று கடவுள் நம்பிக்கை அதில் ஒன்று கைவிட்டுவிட்டது மற்றொன்றான கடவுள் நம்பிக்கை நிச்சயம் காப்பாற்றும் என நாம் நம்பலாம்
அவர் கண்முன்னாடியே அவர் குடும்பத்துக்கு ஒரு பொருளாதார உதவி கிடைத்துவிட்டால் அவருடைய கடைசி காலம் மிக நிம்மதியாக இருக்கும். ஒரு வேளை அந்த நம்பிக்கையே கூட அவரை காப்பாற்றி விடும். அதனால் தயவு செய்து தங்களால் எவ்வளவு முடியுமோ அதை அவர் குடும்பத்துக்கு சீக்கிரம் கொடுத்து உதவுங்கள்” என அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்..

Comments are closed.