அல்வா வாசு மரணம் ; நிதியுதவியுடன் நடிகர் சங்கம் இரங்கல்..!

256

alva vasu funeral

நகைச்சுவை நடிகர் அல்வா வாசு நேற்று மதுரையில் காலமானார். உதவி இயக்குனராக திரைப்பட வாழக்கையை தொடங்கி பின்னர் நடிகராகி 900 படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இரண்டு தினங்களுக்கு முன் இனி சிகிச்சை பலன் அளிக்காது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டு நேற்று அவரது இல்லத்தில் காலமானார்.

நடிகர் சமூகம் சார்பாக அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கு கொண்டு அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அவருக்கு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினரான விக்னேஷ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் நடிகர் சங்கம் சார்பாக ரூ 35 ஆயிரம் வழங்கினார். மேலும் நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலமாக அல்வா வாசு குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Comments are closed.