‘மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவியின் இடத்தில் ஜனனி ஐயர்..!

251

baloon

‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பின் ஹிட் ஜோடியாக மாறிய ஜெய், அஞ்சலி மீண்டும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘பலூன்’. அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர்.

இவருடைய கதாபாத்திரம் 1980களின் பிண்ணனியில், கொடைக்கானலில் வாழும் ஒரு பெண்ணை பற்றியதாம். மிகவும் கட்டுகேகோப்பான, ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடித்துள்ளார் ஜனனி. இன்னும் சொல்லப்போனால் இந்த கதாபாத்திரம் மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்பதுபோல இயக்குனர் சினிஷ் வடிவமைத்துள்ளாராம். இந்த கதாபாத்திரத்தில் நடித்த ஜனனி ஐயரின் அனுபவம் எப்படி இருந்ததாம்..?

“காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஸ்ரீதேவியின் நடிப்புக்கு ஈடு, இணை எதுவும் வரவே முடியாது என்றும் நாங்கள் பேசி கொண்டோம். ஆனாலும் நான் நடிக்கும் போது, ஸ்ரீதேவி மேடம் அவர்களின் நடிப்பை பார்த்து அதனால் ஏற்பட்ட உந்துதல் என்னை சிறப்பாக நடிக்க வைத்தது எனலாம். என்னை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் இந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்” என்று கண்களை சிமிட்டுகிறார் ஜனனி ஐயர்.

Comments are closed.