“ஆஸ்ரம் பள்ளி விவாகரத்தில் உண்மை நிலை” ; லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம்..!

201

latha rajini

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் என்கிற பள்ளியை நடத்தி வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். தற்போது இந்த பள்ளி குறித்து சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வதந்திகளாக வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ஆஸ்ரம் பள்ளி விவாகரத்தில் உண்மை நிலை என்ன என லதா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கை இதோ..

நாங்கள் கிண்டியில் இருக்கும் எங்கள் பள்ளியை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறோம். சமீபகாலமாக நாங்கள், குடும்ப தகராறு காரணமாக எங்கள் நில உரிமையாளரிடமிருந்து அநேக தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம்.

இது வாடகை பற்றிய விஷயமாக மட்டும் அல்லமால், ஒரு அசாத்திய சூழ்நிலையை உருவாக்கும் பிரச்சனையாக உள்ளது. நில உரிமையாளர்கள் காரணமில்லாமலும், முறையற்ற நிலையிலும் வாடகைத் தொகையை நாங்கள் பேசிய தொகையைக் காட்டிலும் அதிகரித்துள்ளனர்.

நாங்கள் இது குறித்து ஏற்கனவே ஆலோசித்தது மட்டுமில்லாமல் அந்த இடத்தை காலி செய்வது குறித்தும் முடிவெடுத்துள்ளோம். மேலும் இப்பிரச்சனையை முடிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். ஊடகங்களும், பொதுமக்களும் இது போன்ற தவறான செய்திகளை நம்பாமல், உண்மையை புரிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments are closed.