தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி ஊரறிந்த ஒன்று.. இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று இதன் இரண்டாம் பாக்க வி.ஐ.பி-2’ படம் வெளியானது. இந்தப்படம் முதல் பாகத்தைப்போல இல்லை என்றும், பரவாயில்லை ஒகே தான் என்றும் பலவிதமான கலவையான விமர்சனங்கள் இந்தப்படத்திற்கு கிடைத்தன.
இந்தநிலையில் இந்தப்படம் வெற்றிபெற்றதாக பத்திரியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. விழாவில் பேசிய தனுஷ் “எப்போதுமே முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வாடிக்கை தான். படத்தின் கதையை இயக்குனரிடம் கொடுக்கும் பொழுதே வி.ஐ.பி-யின் முதல் பாகம் அளவிற்கு இருக்காது என்பதை சொல்லியே தான் கொடுத்தேன். முதல் பாகம் அளவிற்கு இல்லாவிட்டாலும், இன் தப்படத்தின் வெற்றி இப்படித்தான் இருக்கும் என நாங்கள் நினைத்த அளவைவிட கூடுதலான வெற்றி கிடைத்ததில் சந்தோஷமே” என கூறினார்.
வழக்கமாக இதுபோன்ற வெற்றி விழா சந்திப்புகளில் சாதாரண வெற்றியைக்கூட பிரமாண்டமாக பேசுபவர்கள் மத்தியில் தனுஷ் தங்கள் படத்தின் என்ன என்பதை மிகைப்படுத்தாமல் யதாரத்தமாக பகிர்ந்துகொண்டது அவரது நேர்மையை பறைசாற்றியுள்ளது. .

Comments are closed.