புரட்சித்தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

102

 

சினிமாவில் சாதிக்கவேண்டும் என வருபவர்களுக்கு தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம். தன்னம்பிக்கையுடன் கூடிய திறமைக்கு என்றுமே மரியாதை உண்டு. பத்து அடியாட்களில் ஒருவராக வந்தாலும் தனது திறமையான நடிப்பால் மெயின் வில்லனாக மாறி, அதிலும் புதிய பரிணாமத்தை காட்டியதால் ஒரு அருமையான கதாநாயகனாகவும் தன்னை மாற்றிக்கொண்ட நடிகர் சத்யராஜை விட தன்னம்பிக்கைக்கு உதாரணமாக வேறு யாரை சொல்லிவிட முடியும்?.

வில்லனாக நடித்து கதாநாயகனாக மாறிய சிலருக்கும், வில்லனாக நடித்து கதாநாயகனாக மாற விரும்பும் பலருக்கும் இன்றும் கூட சத்யராஜ் தான் ரோல் மாடல் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. நண்பன், ராஜாராணி, சிகரம் தொடு என ட்ரெண்டிற்கு ஏற்றமாதிரி குணச்சித்திர வேடங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து ராஜபாட்டையில் தான் நடைபோட்டு வருகிறார்.

தமிழ் மட்டுமல்ல.. தெலுங்கு, இந்தி என மொழிபேதம் இல்லாமல் பரபரப்பாக நடித்துவருகிறார் சத்யராஜ்.  இன்று பிறந்தநாள் காணும் நம் புரட்சித்தமிழன் சத்யராஜுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Comments are closed.