100% உறுதியாகிவிட்டது அஜீத்-கௌதம் மேனன் கூட்டணி

84

மூன்று நாட்களுக்கு முன் தான் அஜீத்திற்கு தூது அனுப்பியுள்ளார் கௌதம் மேன்ன் என செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அது முற்றிலுமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ சத்யா மூவிஸ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அஜீத்தை வைத்து ‘துப்பறியும் ஆனந்த்’ படத்தை இயக்குவதாக இருந்து ஒரு கட்டத்தில் அது ட்ராப் ஆனது. அதேபோல விஜய்யை வைத்து ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ என்ற படத்தை ஆரம்பித்தார். ஆனால் அதிலிருந்து விஜய்யும் விலகிக்கொண்டார். சில மாதங்களுக்கு முன் சூர்யா நடிக்க துருவ நட்சத்திரம் என்ற படத்திற்கு பூஜை போட்டார் கௌதம். ஆனால் சில காரணங்களை வெளிப்படையாக கூறி அந்தப்படத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார் சூர்யா.

ஏற்கனவே விஜய், சூர்யா ஆகியோரின் படங்கள் கைவிட்டுப் போயிருந்த நிலையில் கௌதம் மேனனின் பார்வை மீண்டும் அஜீத் பக்கம் திரும்பியது. சூர்யா, விஜய் இருவரும் கைவிட்டுவிட்ட இந்த சூழ்நிலையில் அஜீத் கைகொடுத்தால் மட்டுமே மீண்டும் தன்னை தமிழ் திரையுலகில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என நம்பினார் கௌதம் மேனன். அதேபோல ஒருமுறை கைவிட்டுப்போய் மீண்டும் அஜீத் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதால் கௌதம் தற்போது தாங்க முடியாத உற்சாகத்தில் இருக்கிறார். “இந்தப்படம் ஒரு ஸ்டைலிஷான மாஸ் எண்டெர்டெயின்மெண்ட் விருந்தாக இருக்கும்” என தெரிவித்துள்ளார் கௌதம் மேனன். அஜீத் தற்போது ‘வீரம்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதை முடித்துக்கொடுத்துவிட்டு வரும் 2014-ல் இந்தப்படத்திற்கு வருகிறார். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்தால் அது பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அஜீத்தின் ரசிகர்களும் இந்தக்கூட்டணி இணையவேண்டும் என்றுதானே எதிர்பார்த்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.