முதல் நாள் தீபாவளி ?!.. மறுநாள் தலை தீபாவளி..!!

167

யாருக்காகவது இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்திருக்குமா என தெரியவில்லை. ஆனால் மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவுக்கு இப்படி ஒரு யோகம் அடித்திருக்கிறது. காதலித்த பெண்ணையே, அதிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரையே திருமணம் செய்யப்போகும் ஆஷிக், தீபாவளிக்கு முதல் நாள் அதாவது நவம்பர்-1ஆம் தேதி தன் திருமணத்தை நடத்த இருக்கிறார். சொல்லப்போனால் இவர்களுக்கு முதல் நாள் தான் தீபாவளி.. மறுநாள் தலை தீபாவளி..!

இயக்குனர்-ஹீரோயின் காதல் காம்பினேஷனில் லேட்டஸ்டாக ஜோடிசேர்ந்துள்ளவர்கள் தான் மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவும் நடிகை ரீமா கல்லிங்கலும். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது ‘22 ஃபீமெல் கோட்டயம்’ படத்தில் தான். இந்தப்படத்தை ஆஷிக் அபு இயக்க, அப்போதே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருப்பதாக கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பே ஒரு கிசுகிசு பரவ, நம்ம ஊர் ஹீரோயின்கள் மாதிரி பதறிப்போய் அதை மறைக்க முயற்சி எல்லாம் செய்யவில்லை ரீமா. துணிச்சலாக தாங்கள் காதலிப்பதை ஒத்துக்கொண்டவர் விரைவில் தங்களது திருமணம் நடக்கும் என்றும் அறிவித்தார்.

அதை உறுதிசெய்யும் விதமாக இப்போது அவரது காதலரான ஆஷிக் அபுவும் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தங்களது திருமணம் நவம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என கூறியிருந்தார். இப்போது அதை தீபாவளிக்கு முதல்நாளாக அறிவித்திருக்கிறார் ஆஷிக் அபு. மேலும் ரீமா தன்னை திருமணம் செய்துகொள்வதால் அவரது நடிப்புலக பயணம் எந்தவிதத்திலும் தடைபடாது என்றும் அவர் எப்போதும்போல படங்களில் நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்களது திருமணத்துக்கு முதல் ஆளாக வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். இது இயக்குனர் ஆஷிக் அபுவை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

1 Comment
  1. Sugar Rush 1000 online says

    452962 198972Thank you for your very excellent info and respond to you. I need to verify with you here. Which isnt one thing I often do! I get pleasure from reading a publish that can make folks feel. Moreover, thanks for allowing me to remark! 49368

Leave A Reply

Your email address will not be published.