கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் ரமணா. லஞ்சத்துக்கு எதிராக ஒரு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது இந்தப்படத்தை தற்போது ‘கப்பார்’ என்ற பெயரில் இந்தியிலும் ரீமேக் செய்கிறார்கள். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்த படத்தில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்க, தமிழில் ‘வானம்’ படத்தை இயக்கிய கிரிஷ் தான், இந்தியில் இந்தப்படத்தை இயக்குகிறார் என்பது சில மாதங்களுக்கு முன்பே தெரிந்த செய்திதான்.
‘கப்பார்’ படத்தில் முதலில் அமலாபால் நடிப்பதாக ஒரு பேச்சு அடிபட்ட்து. ஆனால் இப்போது அந்த கேரக்டரில் கத்ரீனா கைஃப் நடிக்கிறார். காரணம் தற்போது இந்தி மார்க்கெட் நிலவரத்தை கணக்கில் கொண்டுதான் தற்போது கத்ரீனா கைஃப்ஃபை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால் இந்திப்பட வாய்ப்பு நழுவிப்போனதில் தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்கிறார் அமலாபால். காரணம் கேட்டால், “கப்பார் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு என்னிடம் அவர்கள் கேட்ட தேதிகள் இல்லாதது தான் காரணம். அதனால் இந்தியில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் நானேதான். அப்புறம் நானே எப்படி வாய்ப்பு போச்சு என்று வருத்தப்படுவேன்?. இப்போது தென்னிந்திய மொழிகள் எனக்கு வேண்டிய அளவு அள்ளித்தந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி கூடிய விரைவில் இந்தியிலும் கால் பதிப்பேன்” என்கிறார் அமலாபால்.