விறுவிறு வேகத்தில் பாண்டிராஜ் – சிம்பு கூட்டணி

199

சிம்பு, இப்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். ஆக்ஷன், ரொமாண்டிக் ஏரியாவில் கதகளி ஆடுபவர் சிம்பு. பாண்டிராஜோ கிராமத்து ஏரியாவில் பசங்களுடன் குச்சுப்புடி ஆடுபவர். இவர்கள் இரண்டுபேரும் இணைவது உண்மையிலேயே ஒரு புதுவிதமான காம்பினேஷன் தான்.

“இந்தப்படத்தின் படப்பிடிப்பு இரவும் பகலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான காட்சிகள் நவம்பர் முதல் தேதிக்குள் முடிந்து விடும். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் இந்தப்படம் விருந்து படைக்கப்போவது உறுதி. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களின் அன்புத்தொல்லை தான் சிலசமயங்களில் தவிர்க்கமுடியாமல் போய்விடுகிறது. ஆனால் அதையும் சமாளிக்கிறேன். இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன” என்று சிம்புவே படத்தைப் பற்றி சந்தோஷத்துடன் ட்வீட் செய்திருக்கிறார்.

இந்தப்படத்தில் சிம்புவின் நண்பனாக சந்தானத்துடன் சேர்ந்து சூரியும் நடிக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் இந்தப்படத்தை சிம்புவே தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறாராம். அதைவிட முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

1 Comment
  1. https://cartsinbulk.com says

    268717 262171Get started with wales ahead almost every planking. Ones wales truly are a compilation of huge planks 1 particular depth advisors definitely is the identical towards the entire hull planking nonetheless with even bigger density to successfully thrust outward beyond the planking. planking 975855

Leave A Reply

Your email address will not be published.