அஜித் படத்தில் மனோசித்ரா

58

’அவள் பெயர் தமிழரசி’ படத்தில் அறிமுகமானவர் நந்தகி. அடுத்து தாண்டவக்கோனே படத்தில் நடித்தார். அதன் பிறகு வேறு படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தவர் பிறகு ராசிக்காக பெயரை மனோசித்ரா என்று மாற்றிக் கொண்டு விட்டார். பெயர் ராசி இப்போது அவருக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி அஜித்தின் ‘வீரம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக விதார்த் நடிப்பார் என்று தெரிகிறது. ஹைதராபாத்தில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்க விரும்பும் அஜித் ’ஆரம்பம்’ ரிலீஸ் வரை வீரம் படத்தை பற்றி எந்த தகவலும் வெளியாகக் கூடாது என்று கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார் அஜித்.

Leave A Reply

Your email address will not be published.