‘எங்கடி பொறந்த’ பாடல் உருவான சுவராஸ்ய பின்னணி

57

அனிருத் இசையமைத்த ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘ஒசக்க’ பாடலுக்கும் ‘எங்கடி பொறந்த’ பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதில் ‘எங்கடி பொறந்த’ பாடலை அனிருத் ஆண்ட்ரியா இருவரும் பாடியிருக்கிறார்கள். இந்தப்பாடலுக்கு பின்னால் ஒரு சுவராஸ்யமான கதை இருக்கிறது. அனிருத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் முத்த விவகாரத்தில் ஏற்கனவே ‘வாய்க்கா தகராறு’ இருப்பது உங்களுக்கு தெரியும். இந்த நிலையில் இந்தப்படத்தில் ஒரு பாடலை ஆண்ட்ரியா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தார் படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, அதற்கு ஆண்ட்ரியாவும் ஓகே சொல்லிவிட்டார் ஒரு கண்டிஷனோடு. அதாவது அனிருத்துடன் சேர்ந்து பாடமாட்டேன் என்று. அதேபோல அனிருத்தும் ஆண்ட்ரியாவை சந்திக்கமாட்டேன் என வாக்குறுதி கொடுத்தாராம். அதன்பிற்கு அனிருத் இசையமைத்த மியூசிக் ட்ராக்கிற்கு ஆண்ட்ரியா வேறோர் இடத்தில் இருந்து பாடி அதை ரெக்கார்டு செய்து கொடுக்க, அது மும்பையில் இருந்த அனிருத்திடம் கொடுக்கப்பட்டதும் அனிருத் மீண்டும் அதை முழுமை செய்தாராம். ஆனால் இது முழுக்க முழுக்க கிருத்திகாவின் புத்திசாலித்தனமான ஐடியாவாம்.

Leave A Reply

Your email address will not be published.