டி.வியில் தொடர்கள் பெருகிவரும் இந்தக்காலத்தில் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது சோனி மியூசிக் நிறுவனம். ஆம். இணையதளத்தில் புதிதாக தொடர் ஒன்றை தயாரித்து ஒளிபரப்ப இருக்கிறது சோனி மியூசிக். இதற்கான புரமோஷனல் வீடியோவை இன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.
மேட்பாய்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து சோனி மியூசிக் தயாரிக்கும் இந்த இணையத்தொடருக்கு ‘ஹேப்பி ட்டு பி சிங்கிள்’ அதாவது ‘ஒற்றை ஆளாக இருப்பதில் மகிழ்ச்சி’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.
ரொமாண்டிக், காமெடி கலந்து ஃபேண்டஸியாக உருவாகி இருக்கும் இந்த தொடரில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பன்முகம் கொண்ட, ஸ்ரீகார்த்திக், மிஸ் தென்னிய அழகிப்போட்டியில் கலந்து கொண்டு டாப்-5 பேரில் ஒருவராக வந்த தீக்ஷிதா மற்றும் சுவாமிநாத் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் யூ-டியூப்பில் உள்ள சோனி மியூசிக் நிறுவனத்தின் vevo channelல் இதனை பார்த்து ரசிக்கலாம். கம்ப்யூட்டர் மட்டுமல்ல, மொபைல்போன், டேப்லெட் மற்றும் இணையதளம் பார்க்கும் வசதிகொண்ட அனைத்து சாதனங்கள் வழியாகவும் இதனை கண்டுகளிக்கலாம்.
தமிழ் தெரியாத ரசிகர்களும் பார்க்கும் வகையில் ஆங்கிலத்தில் சப் டைட்டிலுடன் ஒளிபரப்பாக இருக்கிறது இந்த தொடர். டிவி பார்க்கும் நேயர்களை இந்த இணைய டிவிக்கு அதாவது கம்ப்யூட்டருக்கு இழுத்துவரும் முயற்சி தான் இந்த இணையத்தொடர். இதன் முதல் எபிசோட் வரும் நவம்பர் 15ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது.